ஃபிடல் காஸ்ட்ரோ
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஃபிடல் காஸ்ட்ரோ (பிறப்பு: ஆக்ஸ்ட் 13, 1926) கியூபாவின் குடியரசுத் தலைவர் ஆவார். 1959 இல் புரட்சியை வழிநடத்தி ஃபுல்ஜெனிசியோ பாட்டிஸ்ட்டாவின் (Fulgencio Batista) அரசை வீழ்த்திப் பிரதம மந்திரி பதவியைப் பெற்ற காஸ்ட்ரோ 1976 இல் குடியரசுத் தலைவராய் (சனாதிபதியாகப்) பதவியேற்றார். கியூபாவின் பொதுவுடைமைக் கட்சியின் முதல் செயலாளராக 1965 இல் பதவியேற்ற இவர் கியூபாவை ஒற்றைக் கட்சி சோசலிசக் குடியரசாக்கினார்.