அலங்காரத் தாவரங்கள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அழகுக்காக வளர்க்கப்படும் தாவரங்கள் அலங்காரத் தாவரங்கள் எனப்படுகின்றன. இவற்றுள் திறந்த வெளியில் வளர்க்கப்படும் தாவரங்களும், கட்டிடங்களுக்குள் வளர்க்கப்படும் தாவரங்களும் அடங்கும். அழகுக்காக வளர்க்கப்படும் தாவரங்கள் பூக்கும் தாவரங்களாகவோ, இலைத் தாவரங்களாகவோ இருக்கலாம். மரங்கள், செடிகள், கொடிகள், புற்கள், நிலமூடிகள் (Ground Covers) எனப் பல வகைகளையும் சேர்ந்த அலங்காரத் தாவரங்கள் உள்ளன.