இந்துக் கோயில் கட்டிடக்கலை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஆரம்பகாலத்தில் இந்துக் கோயில்கள் நீண்ட காலம் நிலைத்திராத கட்டிடப் பொருள்களினால் கட்டப்பட்டதால் அக்காலக் கோயில்கள் பற்றிய விபரங்கள் இன்று கிடைக்கக்கூடிய நிலை இல்லை. பிற்காலத்தில் கட்டப்பட்ட கல் கட்டிடங்களில், மரம், மூங்கில், புல் போன்ற கட்டிடப்பொருட்களால் அமைக்கப்பட்ட கட்டிட அமைப்புக்களைப் பிரதி செய்தது போன்று காணப்படுவதால் கல் கட்டிடங்களுடன் கூடவே நிலையற்ற பொருட்களிலான கட்டிடங்களும் பயன்பாட்டில் இருந்திருக்கக் கூடும்.