இலங்கையின் மாகாணங்கள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இலங்கையின் மாகாணங்கள் என்பது ஒரு உள்ளூராட்சி அமைப்பாகும். இதன் படி இலங்கை 9 மாகாணங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.வடக்கு-கிழக்கு மாகாணசபைகள் இணைந்து ஒரு அலகாக நிர்வாகிப்படுகிறது. மற்றைய 7 மாகாணங்களும் தனித்தனியே ஒரு மாகாண சபையின் கீழ் நிர்வாகிக்கப்படுகிறது.
பொருளடக்கம் |
[தொகு] தோற்றம்
சுதந்திரத்துக்கு பின், இலங்கையில் நடமுறையிலிருந்த அரசியல் அதிகாரங்களை மையப்படுதிய ஆட்சிமுறை இலங்கை மக்களின் அரசியல் தேவைகளை நிறைவு செய்யமுடியாமல் போகவே. 1955 ஆண்டு தொடக்கமே அரசியல் அதிகார பரவலாக்கம் தொடர்பான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வொருமுறைகளும் பலனற்று போனபோது புதிய பரவலாக்க முறைகள் பரிந்துரைக்கப்பட்டன. அவற்றில் சில
- 1973/74 மாவட்ட அரசியல் அதிகார சபை முறை
- 1979/80 மாவட்ட அபிவிருத்தி சபை/மாவட்ட அமைச்சர் முறை
- 1987/88 மாகாணசபை முறை
[தொகு] சட்டம்
1987 ஆம் ஆண்டு இலங்கை பாராளுமன்றதில் 13ஆவது அரசியல் அமைப்பு சீர்த்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இது மாகணசபைகளை அமைத்தல், மாகாணசமைகளுக்கு ஆளுனர்களை நியமித்தல், மாகாணசபை அமைச்சர் நியமனம், மாகாணசபையின் அதிகாரங்கள், மாகாணசபைகள் சட்டத்தை மீறும் போது எடுக்க வேண்டிய மாற்று நடவடிக்கைகள், மாகாண உயர் நீதிமன்றங்கள் அமைப்பு, மாகாண நிதி ஆனைக்குழு போன்றவற்றுக்கான அடிப்படை சட்டமாகும். இதன் பிறகு பாராளுமன்றத்தில் 1987 ஆம் ஆண்டு 42ஆம் இலக்க மாகாணசபை சட்டம் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டம் மாகாணசபை உறுப்பினர் எண்ணிக்கை, மாகாணசபை கூட்டங்கள் மற்றும் ஒழுங்கு விதிகள், ந்தி செயற்பாடுகள், பொது சேவைகள் அமைத்தல் போன்றவற்றை கட்டுபடுத்துகிறது.
[தொகு] நிர்வாகம்
மாகாணசபையானது பின்வரும் நிர்வாக கட்டமைப்புகளை கொண்டிருக்கும்.
- ஆளுனர்
- மந்திரி சபை
- முதலமைச்சர்
- 4 மாகாணசபை அமைச்சர்கள்
- மாகாணசபை பொதுப் பணிகள் ஆனைக்குழு
- தலைமை செயளாலர்
[தொகு] தகவல்கள்
மாகாணம் | தலைநகர் | பரப்பளவு (ச.கி.மீ.) |
மாவட்டங்கள் |
---|---|---|---|
மத்திய | கண்டி | 5,584 | 3 |
கிழக்கு | திருகோணமலை | 9,951 | 3 |
வட-மத்திய | அனுராதபுரம் | 10,724 | 2 |
வடக்கு | யாழ்ப்பாணம் | 8,882 | 5 |
வடமேற்கு | புத்தளம் | 7,812 | 2 |
சபரகமுவா | இரத்தினபுரி | 4,902 | 2 |
தெற்கு | காலி | 5,559 | 3 |
ஊவா | பதுளை | 8,488 | 2 |
மேற்கு | கொழும்பு | 3,709 | 3 |
[தொகு] இவற்றையும் பார்க்க
இலங்கையின் மாகாணங்கள் | |
---|---|
மேற்கு | மத்திய | தெற்கு | வடக்கு | கிழக்கு | வடமேல் | வடமத்திய | ஊவா | சபரகமுவா |