ஜிம்மி வேல்ஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஜிம்மி டொனால்ட் ஜிம்போ வேல்ஸ் (பிறப்பு ஆகஸ்டு 7, 1966) இலாபநோக்கற்ற விக்கிபீடியாத் திட்டங்களை நடத்தும் விக்கிமீடியா அமைப்பின் ஸ்தாபகரும் வேறுபல விக்கிதிட்டங்களை முன்னின்று நடத்துபவரும் ஆவார். இவர் இலாபநோக்கிற்கான விக்கியா திட்டத்தையும் மே 2006 முதல் கொண்டு நடத்துகின்றார்.
[தொகு] பிரத்தியேக வாழ்க்கையும் கல்வியும்
வேல்ஸ் அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் பிறந்தார். இவரது தந்தையார் மரக்கறிக் கடை ஒன்றின் நிர்வாகியாயிருந்தார். இவரது தாயார் டொறிஸ் மற்றும் அம்மம்மா இர்மா தனியார் பாடசாலையொன்றை நடத்தி வந்தனர். இப்பாடசாலையிலேயே ஜிம்மிவேல்ஸ் ஆரம்பக் கல்வியைப் பெற்றார்.
[தொகு] விக்கிபீடியாவும் விக்கிமீடியா பவுண்டேசனும்
விக்கியைப் பாவித்துக் கலைக்களஞ்சியம் ஒன்றை உருவாக்குக்கும் திட்டத்தை ஜனவரி 11, 2001 லாரி சாங்கர் முன்வைத்திருந்தார். ஜனவரி 15, 2001 இல் விக்கிபீடியா விக்கி முறையில் நிர்வாகிகப் பட்டது இது முன்னைய நீயூபீடியா கட்டுரைகளின் தரங்களை கண்காணிக்கவெனத் தீர்மானிக்கப் பட்டபோதிலும் இதன் மிதமான வளர்ச்சி விக்கிபீடியாவை முன்னெடுத்ததோடு 2002 இல் நியூபீடியா கைவிடப் பட்டது.