நேர வலயம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நேர வலயம் எனப்படுவது பூமியில் ஒரே நேரத்தில் இருக்கும் பிரதேசங்கள். பொதுவாக இதை உள்ளூர் நேரம் என அழைப்பர். பிரதானமாக 24 பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு வலயமும் அதனுடைய அயல் வலயத்தில் இருந்து ஒரு மணி நேரம் வேறுபடுகின்றன. நேரவலயக் கோடுகள் எப்போதும் ஒழுங்காக அமைவதில்லை காரணம் அவை நாடுகள் அல்லது நிர்வாக கட்டமைப்புகளை மையமாகக் கொண்டே வரையப்படுகின்றன.