பிரெட்ரிக் ஏங்கல்ஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பிரெட்ரிக் ஏங்கல்ஸ் (Friedrich Engels), (நவம்பர் 28, 1820 – ஆகஸ்டு 5, 1895) 19ம் நூற்றாண்டைச்சேர்ந்த ஜேர்மன் அரசியல் மெய்யியலாளராவார். இவர் கார்ல் மார்க்ஸ் உடன் இணைந்து கம்யூனிச சித்தாந்தத்தை உருவாக்கியதுடன், கம்யூனிச கட்சி அறிக்கையை மார்க்ஸுடன் சேர்ந்து எழுதினார். கார்ல் மார்க்ஸின் இறப்புக்கு பின் மூலதனம் நூலின் பல தொகுதிகளை தொகுத்தார். கம்யூனிச சித்தாந்தத்தின் மூலவர்களுள் ஒருவராக இவர் கருதப்படுகிறார். மற்றவர் கார்ல் மார்க்ஸ் ஆவார்.