மன்மோகன் சிங்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மன்மோகன் சிங் (Manmohan Singh) (செப்டம்பர் 26, 1932) இந்தியாவின் பதினான்காவது பிரதமர் ஆவார். மன்மோகன் சிங், மேற்கு பஞ்சாபிலுள்ள கா என்னும் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) ஊரில் பிறந்தார். இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். மே 22, 2004 இல் இந்தியப் பிரதமராகப் பதவியேற்றார். சீக்கிய சமயத்தைச் சேர்ந்த இவர், இந்து சமயத்தை சாராத முதல் இந்தியப் பிரதமர் ஆவார். இவருக்கு மனைவியும் மூன்று மகள்களும் உள்ளனர்.
1991 முதல் 1996 வரை பி. வி. நரசிம்ம ராவ் அமைச்சரவையில் மன்மோகன் சிங் நிதி அமைச்சராக பணியாற்றினார். கல்வியாலும், பயிற்சியாலும் தேர்ந்த பொருளாதாரவியல் வல்லுநரான அவர், இந்தியாவின் பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கையின் துவக்கத்தில் பெரும் பங்கு வகித்தார். மன்மோகன் சிங் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் மத்திய ரிசர்வ் வங்கியின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். அவர் நிதியமைச்சராகும் முன் பின்தங்கிய நிலையில் இருந்த இந்திய பொருளாதாரம், இவரின் கொள்கைகளால் முன்னேறத் துவங்கியது எனக் கருதப்படுகிறது.
[தொகு] பணி அனுபவம்
- பொருளாதாரத்தில் First Class Honours பட்டம் , கேம்பிரிஜ் பல்கலைக்கழகம், (1957)
- பஞ்சாப் பல்கலைக்கழகம், சண்டிகர், இந்தியா
- மூத்த விரிவுரையாளர், பொருளாதாரம் (1957-1959)
- வாசிப்பாளர் (1959-1963)
- பேராசிரியர் (1963-1965)
- பொருளாதாரத்தில் D.Phil பட்டம், Nuffield கல்லூரி at ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், (1962)
- தில்லி பொருளாதார பள்ளி, தில்லி பல்கலைக்கழகம்
- பொருளாதார ஆலோசகர், வெளிநாட்டு வர்த்தக அமைச்சகம், இந்தியா (1971-1972)
- முதன்மை பொருளாதார ஆலோசகர், நிதி அமைச்சகம், இந்தியா, (1972-1976)
- கௌரவப் பேராசிரியர் , ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், புது தில்லி (1976)
- இயக்குனர், இந்திய ரிசர்வ் வங்கி (1976-1980)
- இயக்குனர், இந்தியத் தொழில் மேம்பாட்டு வங்கி (1976-1980)
- செயலர், நிதி அமைச்சகம் (பொருளாதார அலுவல் பிரிவு), இந்திய அரசு, (1977-1980)
- ஆளுனர், இந்திய ரிசர்வ் வங்கி (1982-1985)
- துணைத் தலைவர், இந்தியத் திட்டப்பணி ஆணையம், (1985-1987)
- பொருளாதார விவகாரங்களில் இந்தியப் பிரதமரின் ஆலோசகர் (1990-1991)
- இந்திய நிதி அமைச்சர், (ஜூன் 21, 1991 - மே 15, 1996)
- எதிர்க்கட்சித் தலைவர், இந்திய நாடாளுமன்ற மேலவை
- இந்தியப் பிரதமர் (மே 22,2004 - இன்று வரை)
முன்னவர்: அடல் பிகாரி வாஜ்பாய் |
இந்தியப் பிரதமர்கள் 2004—இன்று வரை |
அடுத்தவர்: - |