ஆண்குறி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஆண்குறி என்பது உடலுக்கு வெளியே உள்ள ஆண் இனப்பெருக்க உறுப்பாகும். பாலூட்டிகளில் இவ்வுறுப்பு சிறுநீர் கழித்தற் செயற்பாட்டிலும் பங்கெடுக்கிறது.
[தொகு] மனித ஆண்குறி
மனித ஆண்குறியானது மற்றைய பாலூட்டும் விலங்குகளின் ஆண்குறியிலிருந்து பல விடயங்களில் வேறுபாடானதாக இருக்கிறது. மற்றைய விலங்குகளில் சிலவற்றில் காணப்படுவதைப்போல இவ்வுறுப்பில் நிமிர்வென்புகள் (ஆண்குறி எழுச்சிக்கு உதவும் என்புகள்) காணப்படுவதில்லை. மாறாக இரத்த அழுத்தம் காரணமாகவே மனித ஆண்குறியில் எழுச்சி நிகழ்கிறது. உடற் திணிவோடு ஒப்பிடுகையில் சராசரி விலங்குகளை பார்க்க மனித ஆண்குறியே பெரியதாக அமைகிறது.