சிறுகோள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சிறுகோள் (Asteroid) என்பது எமது சூரியக் குடும்பத்தில், சூரியனைச் சுற்றும் ஒரு சிறிய, திண்மப் பொருளாகும். சிறுகோள்கள் கோள்களிலும் மிகச் சிறியனவாகும். இவை சூரியக் குடும்பத்தின் உருவாக்கத்தின்போது கிரகங்களுக்குள் சேர்த்துக்கொள்ளப்படாத protoplanetary disc இன் மீதிகள் என நம்பப்படுகின்றன.
மிகப் பெரும்பான்மையான சிறுகோள்கள், சிறுகோள் பட்டிப் (asteroid belt) பகுதியிலேயே காணப்படுகின்றன. இவை செவ்வாய்க்கும், வியாழனுக்கும் இடையில், நீள்வளையச் சுற்றுப்பாதயுடன் உள்ளன. சில சிறுகோள்களுக்கு, சிறுகோள் சந்திரன்களும் உள்ளன.
சிறுகோளுக்கான சரியான வரைவிலக்கணம் தெளிவாக இல்லை. semi-major axes வியாழனுக்கு அப்பாலுள்ள, பனிக்கட்டியினாலான சிறிய கோள்கள், வால்வெள்ளிகள், Centaurகள், அல்லது நெப்டியூனுக்கு அப்பாலுள்ள பொருள்கள். விண்கற்கள், கோளிடை வெளி யிலுள்ள திண்மப் பொருட்கள். அஸ்ரரோயிட்டுகளிலும் குறிப்பிடத்தக்க அளவு சிறியவை. (1 கிமீ இலும் மிகச் சிறிய விட்டம்). விண்கற்கள் பொதுவாக பாறை-அளவு அல்லது சிறியவை. சூரியக் குடும்பத்திலுள்ள பொருட்களின் பெயர் விபரங்களுக்கு சூரியக் குடும்பம் பார்க்கவும்.