பாஞ்சியா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பாஞ்சியா அல்லது பேஞ்சியா (Pangaea) என்றழைக்கப்படுவது முற்காலத்தின் புவியில் கண்டங்கள் தோன்றுவதற்கு முன்பு இருந்த ஒரே மாபெரும் கண்டத்தைக் குறிக்கும். கிரேக்க மொழியில் பாஞ்சியா என்பது அனைத்து நிலம் என்பதைக் குறிக்கும். இவ்வார்த்தையானது ஆல்பிரெட் வெகனர் (Alfred Wegener) என்பவரால் 1915-ல் பயன்படுத்தப் பட்டது.
இந்த மாபெரும் கண்டத்தைச் சுற்றியிருந்த ஒரே மாபெரும் கடல் பாந்தலாசா என்றழைக்கப்படுகிறது.