புவியியல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
புவியியல் என்பது புவிப்பரப்பு, அதிலுள்ள உயிர் வகைகள் மற்றும் பண்பாடு என்பவற்றை விளக்கும் ஒரு துறையாகும்.
பொருளடக்கம் |
[தொகு] புவியியலின் அமைப்பு
[தொகு] இயற்கைப் புவியியல்
இயற்கைப் புவியியல், புவியியலை புவி பற்றிய அறிவியல் என்ற வகையிலேயே நோக்குகிறது. இது பூமியின் தளக்கோலம் (layout), அதன் காலநிலை மற்றும் தாவர விலங்கினத் தொகுதிகள் பற்றிப் புரிந்து கொள்ள முயல்கிறது. இயற்கைப் புவியியலைப் பின்வரும் பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
- நிலவியல் (Geology)
- நில உருவாக்கவியல் (Geomorphology)
- நீர்வள இயல் (Hydrology)
- பனியாற்றியல் (Glaciology)
- உயிரினப் புவியியல் (Biogeography)
- காலநிலையியல்
- மண்ணியல் (Pedology)
- Coastal/Marine studies
- புவி உருவவியல் (Geodesy)
- தொல்புவியியல் (Palaeogeography)
- சூழற் புவியியலும் மேலாண்மையும்
- நிலத்தோற்ற வாழ்சூழலியல் (Landscape ecology)
[தொகு] மானிடப் புவியியல்
மானிடப் புவியியல் என்பது புவியியலிலிருந்து கிளைத்த ஒரு துறையாகும். இது மனிதனுக்கும், பல்வேறுவகையான சூழல்களுக்கும் இடையிலான தொடர்புகளை உருவாக்குகின்ற வடிவுருக்களையும் (patterns), வழிமுறைகளையும் பற்றி ஆராய்வதை இலக்காகக் கொண்டுள்ளது. இதன் ஆய்வுப் பரப்பு, மனிதன், அரசியல், பண்பாடு, சமூகம் மற்றும் பொருளாதார அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. மானிடப் புவியியலின் முக்கிய இலக்கு புவியின் இயல் நிலத்தோற்றமாக (physical landscape) இல்லாதிருப்பினும், மனிதச் செயற்பாடுகள் யாவும் இயல் நிலத்தோற்றப் பின்னணியிலேயே நடைபெறுவதால், இதன் தொடர்பின்றி மானிடப் புவியியலை ஆராய முடியாது. சூழற் புவியியல் இவ்விரு துறைகளுக்கும் இடையிலான இணைப்புப் பாலமாக உருவாகி வருகிறது.
மானிடப் புவியியல் பின்வரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படலாம்.
- பொருளாதாரப் புவியியல் (Economic geography)
- வளர்ச்சிப் புவியியல் (Development geography)
- மக்கள் தொகைப் புவியியல் அல்லது மக்கட் பரம்பல் (Population geography or Demography)
- நகரப் புவியியல் (Urban geography)
- சமூகப் புவியியல் (Social geography)
- நடத்தைப் புவியியல் (Behavioral geography)
- பண்பாட்டுப் புவியியல் (Cultural geography)
- அரசியற் புவியியல் (Political geography) புவிசார் அரசியலும் (Geopolitics) அடங்கலாக.
- வரலாற்றுப் புவியியல் (Historical geography)
- பிரதேசப் புவியியல் (Regional geography)
- சுற்றுலாப் புவியியல் (Tourism geography)
- உத்திசார் புவியியல் (Strategic geography)
- பாதுகாப்புப் புவியியல் (Military geography)
- பெண்ணியப் புவியியல் (Feminist geography)
மானிடப் புவியியலின் துணைப்பிரிவுகள் பலவற்றுக்கும் இடையிலான வேறுபாடுகள் பொதுவாகத் தெளிவற்ற நிலையிலேயே இருப்பதால் மேலே தரப்பட்டுள்ள பட்டியல் ஒரு முடிவான பட்டியல் அல்ல என்பதைக் கருத்தில் கொள்ளவும்.
[தொகு] சமூகச் சூழலியற் புவியியல்
[தொகு] புவியியலின் வரலாறு
புவியியலை ஒரு அறிவியலாகவும், தத்துவமாகவும் கருதி முதன்முதலில் ஆராய்ந்தவர்கள் கிரேக்கர் ஆவர். புதிய நாடுகளைத் தேடிப்போன ரோமர்கள் புவியியல் ஆய்வில் புதிய நுட்பங்களைப் புகுத்தினார்கள். மத்திய காலங்களில், இத்ரிசி, இபின் பட்டுடா, இபின் கால்டுன் போன்ற அராபியர்களும் கிரேக்க மற்றும் ரோமன் நுட்பங்களைப் பயன்படுத்தியதோடு அவற்றை மேலும் விருத்தி செய்தனர்.
மார்க்கோ போலோவின் பயணங்களைத் தொடர்ந்து புவியியல் பற்றிய ஆர்வம் ஐரோப்பா எங்கும் பரவியது. 16 ஆம் மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகளின் புகழ் பெற்ற நாடுகாண் கடற் பயணங்கள் அச்சொட்டான புவியியல் விபரங்களையும், புவியியல் சார்பான கோட்பாட்டு அடிப்படைகளையும் பெற்றுக்கொள்வதில் புதிய ஆர்வத்தை உருவாக்கின. இக்காலப்பகுதி பெரிய புவியியற் கண்டுபிடிப்புக்களுக்கான காலப்பகுதியாகவும் அறியப்படுகின்றது. 18 ஆம் நூற்றாண்டில் புவியியல் ஒரு தனித் துறையாக அங்கீகாரம் பெற்றிருந்ததுடன், ஐரோப்பாவின் பல்கலைக் கழகங்களின் பாடத்திட்டங்களிலும் இடம் பெற்றிருந்தது. கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் புவியியல் அறிவின் அளவு பலமடங்காக விரிவடைந்துள்ளது. புவியியலுக்கும், நிலவியல், தாவரவியல் ஆகிய அறிவியல் துறைகளுடனும், பொருளியல், சமூகவியல், மக்கட்தொகைப் பரம்பல் ஆகியவற்றுடனும் பிணைப்புகள் உருவாகி வலுப்பெற்றுள்ளன. மேற்கு நாடுகளில் 20 ஆம் நூற்றாண்டில், புவியியல் துறை நான்கு கட்டங்களைக் கடந்து வந்துள்ளது. இவை சூழல் அறுதிப்பாட்டியம் (environmental determinism), பிரதேசப் புவியியல் (regional geography), [[கணியப் புரட்சி] (quantitative revolution), மற்றும் critical geography என்பனவாகும்.
[தொகு] புவியியல் நுட்பங்கள்
இடஞ்சார் ஊடு தொடர்புகள் புவியியலுக்கு முக்கியமான அம்சங்களாக இருப்பதால், நிலப்படங்கள் (maps) இத்துறைக்கு இன்றியமையாத கருவிகளாக அமைந்துள்ளன. இத்துறையில் நீண்ட காலமாக வழக்கிலிருந்துவரும் நிலப்பட வரைவியலுடன், நவீன புவியியல் பகுப்பாய்வுக்கு உதவியாகக் கணினி சார்ந்த புவியியற் தகவல் முறைமையும் (geographic information systems (GIS)) இணைந்து கொண்டுள்ளது.
- நிலப்பட வரைவியல்:
- புவியியற் தகவல் முறைமைகள் என்பது தேவையின் நோக்கத்துக்கு உகந்த வகையில், அச்சொட்டான (accurate) முறையில், கணினிமூலம் தன்னியக்கமாகப் பெற்றுக்கொள்ளும் வகையில் புவி பற்றிய தகவல்களைச் சேமிப்பது தொடர்பானது. புவியியலின் எல்லாத் துணைத் துறைகளையும் அறிந்திருப்பதோடு, கணினி அறிவியல் மற்றும் தரவுத்தள முறைமைகள் பற்றியும் ஒரு புவியியற் தகவல் முறைமைகள் நிபுணர் அறிந்திருக்க வேண்டும். புவியியற் தகவல் முறைமைகள் நிலப்பட வரைவியல் துறையில் புரட்சிகரமான மாற்றங்களை உண்டாக்கியுள்ளன. இன்று ஏறத்தாள எல்லா நிலப்பட ஆக்க முயற்சிகளுமே ஏதாவதொரு புவியியற் தகவல் முறைமைகள் மென்பொருள் மூலமே செய்யப்படுகின்றன.