விண்டோஸ் மில்லேனியம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
விண்டோஸ் மில்லேனியம் 16/32பிட் கலப்பு வரைகலை இடைமுகமுடைய ஒர் இயங்குதளமாகும். இது செப்டெம்பர் 14, 2000 வெளியிடப்பட்டது.
பொருளடக்கம் |
[தொகு] மேலோட்டம்
விண்டோஸ் 95, விண்டோஸ் 98 வழிவந்த விண்டோஸ் 2000 ஒப்பிடுகையில் வீட்டுப் பாவனைக்காக உருவாக்கப் பட்ட ஓர் இயங்குதளமாகும். விண்டோஸ் 2000 இதற்கு 7 மாதங்கள் முன்னரே வெளியிடப்பட்டது. இது மைக்ரோசாப்ட் இண்டநெட் எக்ஸ்புளோளர் 5.5, விண்டோஸ் மீடியாபிளேயர் 7.0 மற்றும் அடிப்படையான நிகழ்படங்களை (வீடியோ) உருவாக்கி மாற்றங்களை உண்டுபண்ணக்கூடிய விண்டோஸ் மூவிமேக்கர் மென்பொருட்களை உள்ளடக்கியுருந்தது. இதில் இண்டநெட் எக்ஸ்புளோளர் 5.5 மற்றும் விண்டோஸ் மீடியாப் பிளேயர் பழைய விண்டோஸ் இயங்கு தளங்களிலும் பதிவிறக்கம் செய்து பாவிக்கப் படக்கூடியவை. விண்டோஸ் XP ஹோம் பதிப்புப் போன்றல்லாது இது விண்டோஸ் NT வழிவந்த அலுவலங்களை இலக்காகக் கொண்ட இயங்குதளம் அன்று மாறாக இது மைக்ரோசாப்ட் டாஸ் வழிவந்த ஓர் இயங்குதளமாகும்.
விண்டோஸ் மில்லேனியமே குறுகிய வாழ்நாள் உள்ள விண்டோஸ் இயங்குதளமாகும். மாறாக விண்டோஸ் XP மிக நீண்ட ஆயுட்காலமுள்ள இயங்குதளமாகும் விண்டோஸ் XP அக்டோபர் 25, 2001 வெளிவந்தது. விண்டோஸ் விஸ்டா பெப்ரவரி 2007 அளவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப் படுகின்றது.
2006 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் PCWorld சஞ்சிகை இதிலுள்ள தொழில் நுட்பச் சிக்கல்களினால் விண்டோஸ் மில்லேனியம் பதிப்பை மிகமோசமான தொழில் நுட்டப் மென்பொருட்களுள் இதை நான்காவதாகத் தெரிவுசெய்தது. (அமெரிக்கா ஆன்லைன், ரியல்பிளேயர், சின்கரனஸ் சாப்ட் ராம்)
[தொகு] புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட வசதிகள்
கணினியை மீட்டெடுத்தல் - கணினியை மீண்டும் பழையநிலைக்கு மீட்டெடுக்கும் வசதி இவ்வியங்கு தளத்திலேயே மைக்ரோசாப்ட் அறிமுகம் செய்தது. இதிலிருந்து பெற்ற அனுபவங்களை விண்டோஸ் XP இலும் பாவித்தது. கணினியை மீட்டெடுக்கும் செயற்பாட்டினால் கணினியானது மெதுவாக இயங்கும் தவிர கணினியில் உள்ள வைரஸ்களும் மீட்டெடுகப்படும் அபாயம் உள்ளது.
எதை இணைத்தாலும் உடனியங்கும் வசதி- மைக்ரோசாப்ட் விண்டோஸ் மில்லேனியம் இயங்குதளமே முதலாவதாக கணினியில் இணைத்தவுடனேயே இயங்கும் வசதியினை அறிமுகம் செய்தது.
தானகவே இயங்குதளத்தை மேம்படுத்தல் - தானாகவே இயங்குதளத்தை மேம்படுத்தும் வசதியில் இயங்குதள மேம்படுத்தல்களை மற்றும் மிகமுக்கியமான பிரச்சினைகளைத் தீர்க்கும் மென்பொருள் மேம்படுத்தல்களைத் தானாகவோ பயனரின் இடையூறின்றியோ அல்லது சிறிதளவு பயனரின் தலையீட்டுடன் நிறுவக்கூடியது. இது பொதுவாக 24 மணித்தியாலத்திற்கு ஒருதடவை விண்டோஸ் மேம்படுத்தற் பக்கத்தைப் பார்வையிட்டு மேமப்டுத்தல்கள் உள்ளதா எனப் பார்வையிடும்.
கணினி இயங்குதளக் கோப்பைப் பாதுக்காத்தல் - விண்டோஸ் 2000 இல் அறிமுகம் செய்யப்பட்ட விண்டோஸ் கோப்புப் பாதுகாப்பு மற்றும் விண்டோஸ் 98 இலுள்ள கணினி இயங்குதள கோப்பைப் பரிசோதிக்கும் வசதியுடன் இவ்வசதியானது அமைதியாக இயங்குதளத்திற்குத் தேவையான கோப்புக்களை மாற்றமைடையாமல் பாதுகாத்து அப்படியேதும் மாற்றங்கள் நிகழ்தாலும் அதன் முன்னைய கோப்பிலிருந்து மீள்வித்துக் கொள்ளும்.
[தொகு] எதிர்மாறான கருத்துக்கள்
பல பயனர்கள் விண்டொஸ் மில்லேனியத்தின் வன்பொருட்களுக்கான ஒத்திசைவின்மை மற்றும் இயங்குதளம் நேர்தியாக இயங்காமை, இயங்குதளம் உறைதல், ஆரம்பிக்கும் போதும் நிறுத்தும் போதும் உள்ள பிரச்சினைகள் காரணமாக அமைந்தன. இதற்கு வன்பொருட் தயாரிப்பாளர்கள் விண்டோஸ் 95, 98 இற்குத் தயாரித்த டிரைவர் மென்பொருட்களைப் பரீட்சிக்காமலே மில்லேனியத்தில் பாவித்ததால் ஏற்பட்டது. அநேகமாக சந்தர்பங்களில் கணினியின் BIOS மேம்படுததல்கள் விண்டோஸ் மில்லேனியம் சரிவர இயங்குவதற்குத் தேவைப்பட்டது.
- சில கணினி வன்பொருட்களுடன் ஒத்திசைவுப் பிரச்சினை
- சாப்ட்மொடம் (மென்பொருள் மொடம்) போன்ற மலிவாகக் கிடைக்கும் மோடம் அநேகமனவை சரியாக இயங்காமை
- இணைத்தவுடன் இயங்கும் ஆதரவில்லாத பாகங்களுக்கான ஆதரவை மைக்ரோசாப்ட் விலக்கியதால் குழப்பங்கள் நிலவியது. குறிப்பாகப் பழைய சவுண்ட்காட், நெட்வேக்காட். சரிவர இயங்கவில்லை இவை எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து விண்டோஸ் மில்லேனியத்தை ஓர் குழப்பான இயங்குதளமாகத் தீர்மானித்தது.
இவ்வாறாகப் பலகுழப்பங்கள் நிலவியதால் விண்டோஸ் மில்லேனியத்தில் வரும் ME ஐப்பலரும் மைக்ரோசாப் சோதனை (Micrsoft Experiment), தவறுதலான பதிப்பு (Mistake Edition), புரியாத பதிப்பு (Miserable Edition), வேலைசெய்யாத பதிப்பு (Malfunctioning Edition), அநேகமாகப் பிழைகள் (Mostly Erros), பலபிழைகள் (More Errors) என்றவாறு அழைத்தனர்.
வேறுசிலரோ இது தேவையே அற்றபதிப்பு இதிலுள்ள அநேகமான வசதிகளை இலவசமாகப் பதிவிறக்கம் செய்யக் கூடிய மென்பொருட்கள் மூலம் பாவிக்க முடியும் என்றனர்.
[தொகு] ஏனைய பதிப்புக்களுடனான தொடர்பு
பெரும்பாலும் அலுவலகக் கணினிகளை இலக்குவைத்த விண்டோஸ் NT சார்பான விண்டோஸ் 2000 ஓர் வீட்டுத்தேவைக்காகவே இது அறிமுகம் செய்யப்பட்டது. ஜூலை 11, 2006 விண்டோஸ் 98, விண்டோஸ் 98 இரண்டாவது பதிப்புடன் விண்டோஸ் மில்லேனியத்திற்கான மைக்ரோசாப்டின் தொழில்நுட்ப ஆதரவை விலக்கிக் கொண்டது. இது பழைய ஓர் இயங்குதளம் என்பதாக மைக்ரோசாப்ட் கருதுவதால் இதற்கான தொலைபேசியூடான ஆதரவு மற்றும் பாதுகாப்பு மேம்படுத்தல்களை இடைநிறுத்திக் கொண்டது.
விண்டோஸ் 2000 ஐப்போன்றல்லாமல் இயங்குதளத்தை நிறுவும் போதே கோப்புக்களை ஆவணப்படுத்தும் மென்பொருளை நிறுவமாட்டாது.
[தொகு] தேவைப்படும் வன்பொருள்
ஆகக் குறைந்தது 150 MHz பெண்டியம் அல்லது அதனுடன் ஒத்தியங்கும் Processor, 320 மெகா பைட் இடவசதி, 32 மெகாபைட் ராம்.
எனினும் ஆவணப் படுத்தப்படாத ஓர் முறையில் வேகம் குறைந்தகணினிகளில் "/nm" என்னும் சுவிச்களை பாவிப்பதன் மூலம் நிறுவ இயலும்.
[தொகு] உசாத்துணை
[தொகு] வெளியிணைப்புக்கள்
- மைக்ரோசாப்ட் விண்டோஸ் மில்லேனியம்
- GUIdebook: Windows Me Gallery - வரைகலை இடைமுகத்தை விளக்கும் ஓர் இணையத்தளம்
- [http://www.hpcfactor.com/qlink/?linkID=14 HPC:Facவிண்டொஸ் மில்லேனியத்தின் மேம்படுத்தல்கள் மற்றும் திருத்தங்கள் பற்றிய அறிவுறுத்தல்கள்