அகமதாபாத்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அகமதாபாத் இந்தியாவிலுள்ள குஜராத் மாநிலத்தின் மிகப்பெரிய நகரமாகும். இது இந்தியாவில் ஆறாவது பெரிய நகரமாகும். இந்நகரத்தின் மக்கள் தொகை ஏறத்தாழ 5 மில்லியனாகும். இந்நகரம் இதன் பழைய பெயரான கர்ணாவதி என்ற பெயராலும் குஜராத் மக்களால் அம்தாவாத் என்றும் அழைக்கப்படுகிறது.
இந்நகரம் சபர்மதி ஆற்றின் கரையில் குஜராத்தின் வடநடுப் பகுதியில் அமைந்துள்ளது. இந்நகரமே 1960-இல் இருந்து 1970 வரை குஜராத்தின் தலைநகரமாக இருந்தது. பின்னர் காந்தி நகர் மாநிலத்தின் தலைநகரமாக மாற்றப்பட்டது.