அருணாசலப் பிரதேசம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
|
||||||||||||||||||||||||
|
அருணாசலப் பிரதேசம் (Arunachal Pradesh) இந்தியாவின் ஒரு மாநிலமாகும். இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளும் உரிமை கோரும் இரண்டு முக்கிய பிரதேசங்களில் இதுவும் ஒன்று. மற்றது அக்சாய் சின்.
அருணாசலப் பிரதேசம் முன்னர் NEFA (வட கிழக்கு முன்னணி ஏஜென்சி) என அழைக்கப்பட்டது. 1987 வரை அஸ்ஸாமின் ஒரு பகுதியாக விளங்கியது. நாட்டின் கிழக்குப் பகுதியின் பாதுகாப்பையுன், இந்தோ-சீன முறுகல் நிலையையும் கருத்தில் கொண்டு, இதற்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட்டது.
12 நகரங்களிலும், 3649 கிராமங்களிலும் பரவியுள்ள இம் மாநிலத்தின் சனத்தொகை, 2001 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி 1,091,117 ஆகும். இம் மாநிலம் நாட்டில் அதிகுறைந்த அடர்த்தியாக ஒரு சதுர கி.மீட்டருக்கு 13 பேரைக் கொண்டுள்ளது. தேசிய அளவில் 1991 தொடக்கம் 2001 வரையிலான பத்தாண்டு வளர்ச்சியாகிய 21.34% உடன் ஒப்பிடும்போது, மாநில சனத்தொகை வளர்ச்சி 26.21% ஆக உள்ளது. அருணாசலப் பிரதேச சனத்தொகையில் 1000 ஆண்களுக்கு 901 பெண்கள் உள்ளனர். இது தேசிய ஆளவான 933 இலும் குறைவாகும்.
மாநிலத்தின் மொத்த கல்வியறிவு 1991 இலிருந்த 41.59% இலிருந்து 54.74% ஆக அதிகரித்துள்ளது. கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை 487,796 ஆகும். இப் பிரதேசத்தில் 20 முக்கிய இனக்குழுக்களும், பல துணை இனக்குழுக்களும் வாழுகின்றன. ஒரு பொதுக் குழுவிலிருந்து உருவானதால், இச் சமுதாயங்களிற் பெரும்பாலானவை இனரீதியில் ஒத்தவை, எனினும் புவியியல் ரீதியில் தனிமைப் படுத்தப்பட்டிருந்த காரணத்தால், மொழி, உடை மற்றும் பழக்க வழக்கங்களில் சில வேறுபட்ட சிறப்பியல்புகள் அவர்களிடையே இருப்பதைக் காணலாம்.
அவர்களுடைய சமூக-சமய ஒற்றுமையின் அடிப்படையில் இவர்களை மூன்று பண்பாட்டுக் குழுக்களாகப் பிரிக்கலாம். தவாங் மற்றும் மேற்கு கமெங் மாவட்டங்களைச் சேர்ந்த, மொன்பாஸ் மற்றும் ஷெர்டுக்பென்ஸ், லாமாயிச மரபில் வந்த மகாயான பௌத்தத்தைப் பின்பற்றுகிறார்கள். இதனால் இவர்கள் வாழும் கிராமங்களில் அதிக அளவில் அழகுபடுத்தப்பட்ட "கொம்பாஸ்" எனும் பௌத்த கோயில்களைக் காண முடியும். பெரும்பாலானவர்கள், படியமைப்புப் பயிர்ச் செய்கையைக் கைக்கொள்ளும் விவசாயிகளாக இருந்த போதிலும், இவர்களிற் பலர் yak மற்றும் மலையாட்டு மந்தை வளர்ப்பிலும் ஈடுபட்டுள்ளார்கள். இவர்களை ஒத்த பண்பாட்டைக் கொண்டவர்களே, வடக்கு எல்லையோரமுள்ள உயர்ந்த மலைகளில் வாழும் மெம்பாக்கள், கம்பாக்கள் போன்றவர்களாவர். மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் வாழும் கெம்ப்டி மற்றும் சிங்போ இனத்தவர்கள் தேரவாத பௌத்தர்கள். இவர்கள் தாய்லாந்து, மியன்மார் (பர்மா) ஆகிய நாடுகளிலிருந்து நீண்ட காலத்துக்கு முன் இடம் பெயர்ந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள். இவர்கள் தங்கள் தாயகத்தில் வழக்கிலிருந்த பண்டைய எழுத்துக்களிலிருந்து உருவான எழுத்துக்களையே இன்னும் பயன்படுத்தி வருகிறார்கள்.
இரண்டாவது குழுவினர், தொன்யி-போலோ, அபோ தானி என அழைக்கப்படும் சூரிய, சந்திரக் கடவுளர்களை வணங்கும், "அதி"கள், "அகா"க்கள், அப்தானிகள், பங்னிகள், நிஷிகள், மிஷ்மிகள், மிஜிகள், தொங்சாக்கள் போன்றவர்களாவர். இவர்களுடைய சமயக் கிரியைகள், பெரிதும் விவசாய வட்டங்களின் கட்டங்களுடன் பொருந்துகின்றன. அவர்கள் இயற்கைத் தேவதைகளுக்கு விலங்குகளைப் பலியிடுகிறார்கள். இவர்கள் பாரம்பரியமாக ஜும்மிங் அல்லது shifting பயிர்ச் செய்கையைக் கைக்கொள்ளுகிறார்கள். அதிகளும், அப்தானிகளும் ஈர நெற் செய்கையில் பெருமளவில் ஈடுபட்டு, குறிப்பிடத்தக்க விவசாயப் பொருளாதாரத்தைக் கொண்டவர்களாக உள்ளனர். அப்தானிகள் அவர்களுடைய, நெல்லுடன்கூடிய மீன்வளர்ப்புக்கும் பெயர் பெற்றவர்கள். அவர்கள், ஒவ்வொரு நெற்பயிற் செய்கையிலும், இரண்டு முறை மீன் விளைவைப் பெறுவதில் நூற்றாண்டுகளாக அநுபவம் பெற்றவர்கள்.
மூன்றாவது குழுவினர், நாகலாந்தை அண்டியுள்ள திரப் மாவட்டத்தைச் சேர்ந்த நொக்டேக்கள், மற்றும் வஞ்சோக்கள் ஆவர். பாரம்பரிய கிராமத் தலைவர்கள் இன்னும் முக்கிய பங்கு வகிக்கும் இக் குழுவினர் இறுக்கமான சமூகக் கட்டமைப்பைக் கொண்ட கிராம சமுதாயத்துக்காக, அறியப்பட்டவர்கள். நொக்டேக்கள் ஆரம்பநிலை வைஷ்ணவத்தையும் பின்பற்றி வருகிறார்கள்.
[தொகு] References
இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும் | |
---|---|
அருணாசலப் பிரதேசம் | அஸ்ஸாம் | ஆந்திரப் பிரதேசம் | இமாசலப் பிரதேசம் | உத்தரப் பிரதேசம் | உத்தராஞ்சல் | ஒரிசா | கர்நாடகம் | குஜராத் | கேரளம் | கோவா | சத்தீஸ்கர் | சிக்கிம் | தமிழ் நாடு | திரிபுரா | நாகாலாந்து | பஞ்சாப் | பீகார் | மகாராஷ்டிரம் | மணிப்பூர் | மத்தியப் பிரதேசம் | மிசோரம் | மேகாலயா | மேற்கு வங்காளம் | ராஜஸ்தான் | ஹரியானா | ஜம்மு காஷ்மீர் | ஜார்க்கண்ட் | |
யூனியன் ஆட்சிப்பகுதி: அந்தமான் நிக்கோபார் தீவுகள் | சண்டீகர் | தமன் தியூ | தாதர் நகர் ஹவேலி | பாண்டிச்சேரி | லட்சத்தீவுகள் | |
தேசிய தலைநகரப் பகுதி: தில்லி |