நச்சுநிரல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கணினி வைரஸ் கணினி பாதுகாப்புத் தொழில் நுட்பத்தில் தானாகவே பிரதியெடுக்கும் .exe மற்றும் ஏனைய கோப்புக்களைப் பாத்திக்கும் ஓர் நிரலாகும். தமிழில் இதை கணினி நச்சுநிரல் எனலாம். கணினி வைரஸ் ஆனது இயற்கை வைரஸ் போன்றே செயற்பாட்டில் ஒத்திருக்கும் . வைரஸானது பலவாறு பரப்பப்படும் இவ்வகைச் செயற்பாடானது கெட்டமென்பொருள் en:Malware. பொதுவான பாவனையில் கணினி வைரஸ் என்பது கணினிப் புழுக்கள் en:Computer worm, நல்ல நிரல்கள்போல் நடிக்கும் வைரஸ்கள் en:Trojan horse (computing) எல்லாமே வைரஸ் என்றே அழைக்கப் படினும் அவை தொழில் நுட்பத்தில் சற்றே மாறுபாடானவை.
கணினி வைரஸ்கள் கணினியில் அழித்தலை உண்டுபண்ணவேண்டும் என்பதற்காகவே உருவாக்கப் பட்டவை. சில வைரஸ்கள் கணினி ஆரம்பிப்பதை மெதுவாக்கும் அல்லது கணினி வேலை செய்யும் வேகத்தைக் குறைக்கும். சில வைரஸ்கள் குறிப்பிட்ட நேரத்தில் வெடிக்கும் குணடுகள் போன்று குறிப்பிட்ட தினத்தில் மாத்திரம் செயற்படும்.
[தொகு] பரவும் முறைகள்
ஆரம்பத்தில் கணினி வைரஸ்கள் நெகிழ்வட்டு en:Floppy disk, இறுவட்டுen:CD-ROM போன்றவற்றாலேயே பரவினவெனினும் தற்போது மிகப் பெருமளவில் மின்னஞ்சல், இணையம் ஊடாகவே பரவி வருகின்றது.
[தொகு] தடுத்தல்
வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் ஒன்றை நிறுவி அதனை காலத்திற்குக் காலம் மேம்படுத்தி வரவேண்டும்.